வன்முறைக்கு தீர்வு காணப்பட்டதே தவிர தமிழ் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, December 6th, 2017

நாட்டில் வன்முறை ஒழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறிவிட்டால் மட்டும் போதாது, சுதந்திரக் காற்றை மட்டும் குடித்துக் கொண்டு தமிழ் மக்கள் வாழ முடியுமா? என்பது குறித்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பொது நிர்வாக, முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள், உள்ராளூட்சி மற்றும் மாகாண சபைகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போதைய நிலையில் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை வைத்துக் கொண்டு, வெற்றுக் கதைகளை அளந்து கொண்டிருக்காமல், வடக்கு மாகாண சபையும் தொழில்வாய்ப்புகளை உருவாக்க முன்வர வேண்டும். வடக்கின் புனரமைப்பு அமைச்சராக நான் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் பல்வேறு தொழில்வாய்ப்புகளை வடக்கில் உருவாக்குவதற்கு என்னால் முடிந்திருந்தது. வடக்கு மாகாண சபையால் இதுவரையில் ஒரு வேலைவாய்ப்பினைக் கூட உருவாக்க முடிந்திருக்கின்றதா?

கட்டாக்காலி மாடுகளைப் பிடித்து, மக்களிடம் கொடுத்துவிட்டு, சுய வேலைவாய்ப்பு வழங்கினோம் எனக் கூறி முடிப்பதற்குள் அந்த மாடு தன் வழியே சென்று விடும் நிலைமைகளையே காணக்கூடியதாக இருக்கின்றது. தேர்தல்களில் போட்டியிடுவதற்கு காட்டப்படுகின்ற அக்கறை, முயற்சி என்பவற்றை மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் காட்ட வேண்டும். அதற்கான ஆளுமை வேண்டும் – என்றார்.

Untitled-8 copy00

Related posts:

திருக்கோணேஸ்வரத்தின் மஹா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
உள்ளூராட்சி தேர்தலை மக்கள் உரிய முறையில் பயன் படுத்தினால் நிச்சயம் எம்மால் சாதித்துக்காட்ட முடியும் ...
கிளி. ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவன புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரத...

கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தை மக்கள் இனியும் தவறவிடக் கூடாது - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரி...
யாழ் மாநகரசபையால் அதிகரிக்கப்பட்ட குடிநீர்க் கட்டண அதிகரிப்பை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள்...
இரணைமடுக் குளத்தினை மேலும் விஸ்தரிப்பதற்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி - கிளிநொச்சியில் அம...