வன்முறைகளுக்கூடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 6th, 2018

வன்முறைகளுக்கூடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும் என்பதுடன் அதனையே இற்றைவரையும் நாம் வலியுறுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு அல்வாய் பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் கண்டுகொண்ட அனுபவங்களும் பாடங்களுமே எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற முக்கிய விடயமாக அமையப்பெற்றுள்ளது.

அந்தவகையில்தான் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைக் காணவேண்டுமாயின் அதற்கு கொலைகளும் வன்முறைகளும் ஒருபோதும் சாத்தியமாகப் போவதில்லை.

இதனடிப்படையிலேயே கடந்தகால அனுபவங்களினூடான படிப்பினைகளைக்கொண்டு எம்மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகள் காணப்படல் வேண்டும் என்றும் அந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்றும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா தென்னிலங்கயைில் மாறி மாறி வரும் அரசுகளை நாம் ஒருபோதும் குறைசொல்லாது அந்த அரசுகளினூடாக எமது மக்களுக்கு ஏற்றவகையிலான நன்மைகளை பெற்றுத்தரமுடியும் என்பதையும் நன்குணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த நிலைப்பாட்டையே நாம் கடந்த கால அரசுகளுடன் கொண்டிருந்த பல நலத்திட்டங்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுத்திருந்தோம்.

அந்தவகையில் தீர்வுகாணக்கூடியதான இலகுவான வழிமுறைகள் இருக்கின்றபோதிலும் அவற்றை உரிய முறையில் பயன்படுத்தாது கடந்தகால தமிழ் தலைவர்கள் விட்டதவறுகள் காரணமாகவே எமது மக்கள் இன்றுவரை பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தவகையில் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை மக்கள் சரியாக பயன்படுதி எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னத்திற்கு பெரு வெற்றியை தருவார்களாயின் மக்களது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


இந்து சமுத்திரத்தில் மீன்பிடி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் - மாலைதீவு தூதுவர் கலந்துரையாடல்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்...
நன்றிக்கு தலை வணங்கும் நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்...