வன்னேரிக்குளம் மக்களின் எதிர்பார்ப்புக்கள் ஒருபோதும் வீண்போகாது – டக்ளஸ் எம்.பி. நம்பிக்கை தெரிவிப்பு!

Saturday, October 26th, 2019

வன்னேரிக்குளம் பிரதான வீதியின் அபிவிருத்தியிலேயே எமது கிராமத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. வீதி புனரமைக்கப்பட்டால் தான் எமது பகுது மக்களின் வாழ்க்கை முறையும் வாழ்வாதாரமும் மாற்றம் பெறும். எமது அவல நிலையை மாற்றி ஏனைய நகர்ப்புற மக்களைப் போல வாழ வழிவகை செய்து தாருங்கள் என வன்னேரிக்குளம் பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் பகுதுக்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

இதன்போதே அப்பகுதி மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

எமது பகுதி மக்களின் வாழ்வியலை பெரிதும் பாதிக்கும் விடயமாக இருப்பது எமது பகுதியையும் பிரதான நகரையும் இணைக்கும் வன்னேரிக்குளம் வீதிதான்.இதன் அபிவிருத்தி நடைபெறாமையால் இப்பகுதியில் சேவையாற்ற வைத்தியர்கள் வருவதில்லை. கற்பிக்க ஆசிரியர்கள் வருவதில்லை. அதுமட்டுமல்லாது எமது விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாதுள்ளது.
இதனால் எமது பகுதியின் கல்வியும் எமது பொருளாதாரமும் பறிக்கப்படுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது. எமது பகுதிக்கு நீங்கள் இன்று வந்துள்ளதானது எமக்கு ஒளிமயமான வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் நீங்கள் தீர்த்து தருவீர்கள் என நம்புவதுடன் ஏனைய அரசியல் வாதிகளை போலல்லாது நீங்கள் இதனை செய்து தருவீர்கள் என்ற நம்பிக்கையும் எம்மிடம் நிறையவே இருக்கின்றது என தெரிவித்தனர்.

மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்தபின் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம்

யுத்தம் நிறைவுக்கு வந்து 10 வருடங்கள் நிறைவு கண்டபோதும் இப்பகுதி மக்களது தேவைப்பாடுகள் அதிகமாகவே உள்ளது.

ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசுக்கு முண்டு கொடுத்துக்கொண்டிருப்பதுடன் அரசை தீர்மானம் செய்யும் சக்தியாகவும் இருக்கின்றனர்.

ஆனாலும் அவர்கள் இப்பகுது மக்கள் தொடர்பில் இதுவரை எந்த நடவக்கையையு மேற்கொள்ளவில்லை.

ஆனால் நான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இவ்வாறான பிரச்சினைகளை ஒரு தொலைபேசி அழைப்பில் நிறைவுசெய்து கடுத்திருக்கின்றேன்.

நான் ஒருபோதும் அரசுக்கு முண்டு கொடுத்தது கிடையாது. அர்சுகளுக்கு மேலதிக ஆதரவையே வழங்கிவந்திருக்கிறேன்.

அந்தவகையில் வருகின்ற சந்தர்ப்பங்களை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்களது வெற்றியில் நாமும் பங்காளர்களாக இருந்து அவரது வெற்றியை நாம் உறுதி செய்ய வேண்டும்.
அந்த வெற்றியூடாக நான் உங்கள் தேவைப்படுகளை நிச்சயம் நிறைவு செய்து தருவேன் என்றார்

Related posts:


மறுபடியும் தமிழகத்தின் முதல்வராகும் உங்களை ஈழத்தமிழ் உறவுகள் சார்பாக வாழ்த்துகிறேன்! - டக்ளஸ் தேவானந...
பூநகரி பிரதேச மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம்...
தரமற்ற பகுதியில் குடியிருப்பை அமைத்து குப்பைகளையும் குவித்து நிம்மதியற்றவர்களாக்கிவிட்டது நல்லாட்சி ...