வன்னி மக்கள் ஓரளவேனும் நம்பிக்கைக்கு உரியவர்களை இனங்கண்டுள்ளனர் – ஓர்ஆசனத்தை வைத்தே வன்னி மக்களின் தேவைகளுக்கு முடியுமானவரை தீர்வு : டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Saturday, August 8th, 2020

மக்கள் வன்னியில் எமது கட்சிக்கு வழங்கியுள்ள ஒரு ஆசனத்தின் மூலம் அம்மாவட்ட மக்கள் எதிர்கொள்கின்ற அநேகமான பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா  இம்முறை வன்னி மக்கள் ஓரளவேனும் நம்பிக்கைக்கு உரியவர்களை இனங்கண்டு கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். –

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து கூறுகையில் –

வன்னியில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஆசனங்கள் கிடைக்கவேண்டும் என்று எதிர்பாத்திருந்தேன். எனினும் கிடைத்த ஒரு ஆசனத்தின் மூலம் வன்னி மக்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பேன்.

நான் எந்த அமைச்சையும் எதிர்பார்க்கவில்லை. எனினும் பிரதமரின் பதவி ஏற்பு நிகழ்விற்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்விற்கு வன்னியில் வெற்றிபெற்ற எமது உறுப்பினரையும் அழைத்துச் செல்லவுள்ளேன்

அத்துடன் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் மேல் மக்களிற்கு நம்பிக்கை இல்லாத நிலையில் நம்பிக்கைக்குரியவர்களை மக்கள் தெரிவு செய்துள்ளார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழில் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் தொழில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ...
அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்...
மக்கள் நலன்சார் திட்டங்கள் அர்த்தமுள்ளவகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிட...

கைத்தொழிற்துறை ஊக்குவிப்பு தொடர்பில் பல முன்மொழிவுகள் : ஆரோக்கியமான நிலை  என்றே கருதுகின்றேன் -  டக்...
யாப்பியலாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளளனர் என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும் - டக்ளஸ் எ...
வடக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு உடனடியாக தடுக்கப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்...