வந்தவர்கள் யாவரும் ஏமாற்றிச் சென்றனர் – உங்களையே நம்புகின்றோம்- இலுப்பைக்கடவை மக்கள் தெரிவிப்பு!

Friday, November 8th, 2019

இதுவரை காலகும் எமிடம் வாக்கு கேட்டு வந்த தமிழ் கட்சிக் காரர்கள் எம்மை ஏமாற்றியே சென்றுள்ளனர். இதனால் நாம் பலவழிகளிலும் ஏமாற்றமடைந்துவிட்டோம். ஆனால் உங்களது வரவு எம்மை நம்பிக்கை கொள்ளச் செய்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் சுட்டிகாட்டியுள்ளனர்.

இன்றையதினம் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலாள்ர் நாயகம் மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.
இதன்போது

கடந்த காலங்களில் இப்பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் இப்பிரதேசத்தை முன்னிறுத்தும் மக்கள் பிரதினிதிகள் அக்கறை செலுத்தவில்லை. இதன் காரண்மாக இப்பகுதி மக்கள் அனைத்து வகையிலும் ஏமாற்றமடைந்த நிலையிலேயே வாழ்கின்றனர். அத்மட்டுமல்லது பல பக்கச்சார்புகளாலும் புறம்தள்ளப்பட்டுள்ளோம். இதனால் நாம் தொழிவாய்ப்பு வழ்வாதாரம் உள்ளுட்ட அனைத்து வகையானா தேவைப்பாடுகளையும் இழந்துள்ளோம்.
அந்தவகையில் இம்முறை நாம் தாங்கள் முன்னெடுக்கும் பாதையை பலப்படுத்தி அதன் வழியில் செல்ல தீர்மானித்துள்ளோம் என தெரிவித்த மக்கள் இமுறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்சவின் வெற்றிக்கு பங்களிப்பு செய்வதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் மன்னார் இலுப்பைக்கடவை கடற்றொழிலாளார் இறங்குது உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளும் நிரந்தர தீர்வை பெற்றுத்தந்து எமது மக்களின் எதிகாலத்தை வளமானதாக உருவாக்கித்தாருங்கள் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Related posts:


வடக்கின் பொருளாதார மேம்பாட்டிற்கு கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் பங்களிப்பு மிக அவசியம் - ...
மக்களுக்கு வெறும் உணர்ச்சிகளை திணிப்பவர்கள் ஒரு வேளை உணவளிப்பதற்கான வழியைக் காட்டுவதாக இல்லை - நாடாள...
ஜனாதிபதியின் முன்னெடுப்புக்கள் 'அற்புதம்' - பலம்படுத்த வேண்டும் என்று தமிழ் தரப்புகளிடம் அமைச்சர் ...