வத்தராயன் கடற்றொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு – அனைத்து செலவுகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்பு!

Sunday, February 13th, 2022

அண்மையில் உயிரிழந்த வத்தராயன் கிராமத்தினை சேர்ந்த இரண்டு கடற்றொழிலாளர்களையும் தேடிக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியின் போது ஏற்பட்ட மொத்தச் செலவினையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுபேற்றுக் கொண்டார்.

அந்தவகையில், ஒரு இலட்சம் ரூபாய் நிதியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  சம்மந்தப்பட்ட கடற்றொழிலாளர் சங்கத்தினரிடம் கையளித்தார்.

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பதினோராம் கட்டை கடற்றொழில்  சங்கத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதேச கடல் தொழிலாளர் சங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நிதியை அமைச்சர் வழங்கி வைத்திருந்தார்..

இதேவேளை வடமாராட்சி கிழக்கு பிரதேசத்தில் கடற்றொழில் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் வடமாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசத்திற்கான புதிய நிர்வாக சபை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னிலையில் இடம்பெற்றது.

இதனையடுத்து புதிய நிர்வாகத்தினருக்கான வாழ்த்துக்களை தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், வடமாராட்சி கிழக்கு கடல்வளத்தினை பாதுகாத்து வளர்த்தெடுப்பதற்கு ஏற்ற தொழில் முறைகளைப் பயன்படுத்தி – சட்டங்கையும் ஒழுங்கு விதிகளையும் மீறாத வகையில் தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதை உறுதிப்படுத்த வேண்டியது கடற்றொழில் சமாசத்தின் பொறுபாபாக இருக்கும் எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்ப...
சபரிமலை யாத்திரை தேசிய புனித யாத்திரையாக மாற்ற நடவடிக்கை – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
பேலியகொடை மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம்!