வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலக கட்டடத் தொகுதி அமைச்சர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் திறந்துவைப்பு!
Wednesday, December 23rd, 2020ஊர்காவற்றுறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் மற்றும் கடற்கலங்கள் பரிசோதிக்கும் தளம் ஆகியன இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது
யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கிடையிலான பாதுகாப்பான பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் மூன்று கோடி நிதியுதவியில் ஊர்காவற்துறையில் குறித்த வணிகக் கப்பற்துறைச் செயலக உப அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டது.
இன்று காலை 10 மணியளவில் கறித்த நிகழ்வு நடைபெற்றது. இதன் போது துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஆகியோருடன் கறித்த பிரதேசத்தின தவிசாளர் ஜெயகாந்தன் மற்றும் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி உள்ளிட்டோருடன் பிரதேச செயலர்கள் துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|