வட மாகாண பாடசாலைகளுக்கு விஷேட நிதி ஒதுக்கீடுகள் வேண்டும் – நாடாளுமன்ற உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 25th, 2016

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்தும் பல வருடங்களாக கல்வி நிலையில் தேசிய ரீதியில் பார்க்கும்பொழுது, இறுதி இடங்களையே வகித்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், முல்லைத்தீவு மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களின் கீழ் 27,970 மாணவர்கள் 126 பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றபோதிலும், இந்த 126 பாடசாலைகளிலும் வளப் பற்றாக்குறைகள் காணப்படுவதாகத் தெரியவருகின்றன. அந்த வகையில் பார்க்கின்றபொழுது, கல்வி நிலையில் பாரிய பின்னடைவை கண்டுவருகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை தொடர்பில் மாகாண சபைகள் மிகுந்த பொறுப்புடன் செயற்படவேண்டும் என நான் இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வ -லியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில்

மேலும், கடந்த யுத்த காலப் பகுதியில் மிகுந்த சிரமங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் போதியளவு இல்லாத நிலையிலும் கடமை நிறைவேற்று அதிபர்களாகவும் கடமை நிறைவேற்று உதவிக் கல்விப் பணிப்பாளர்களாகவும் கடமையாற்றி, இன்னும் தங்களது பணிகளை நீடித்துக்கொண்டு இருப்பவர்கள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தப்படவேண்டும் என்றும், வடக்கு கிழக்கு மற்றும் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு உகந்த நடவடிக்கை தேவை என்றும், தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வருவோருக்கு அவர்களது தகைமைகளுக்கு ஏற்ற நிரந்தர நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்னும் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும்.

010

Related posts:

வன்முறை எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்- ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
பூநகரி பரமன்கிராயில் கைவிடப்பட்டிருந்த இறால் பண்ணைகளை தனியார் நிதிப் பங்களிப்புடன் மீளச் செயற்படுத்த...
யாழ். போதனா வைத்தியசாலை விவகாரங்கள் அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!