வடமராட்சி பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் நேரில் ஆராய்வு!

யாழ் வடமராட்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களது பிரச்சினைகள் தேவைப்பாடுகளை கேட்டறிந்துகொண்டதுடன் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.
வடமராட்சி பருத்தித்துறை வியாபாரி மூலை, கொற்றாவத்தை, தொண்டமனாறு பெரியகடற்கரை, வல்லிபுரவெளி, அல்வாய் சாமணந்துறை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு குறித்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.
Related posts:
வளலாய் , உரும்பிராய் பகுதி மாதர் அமைப்புகள் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!
தீவகத்தில் கடலட்டை வளர்ப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தேவைப்பாடுகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன்? – டக்ளஸ் எம்.பி கேள்வி!
|
|