வடபகுதிக்கு பெருமை சேர்த்த காண்டீபனுக்கு அமைச்சர் டக்ளஸ் பாராட்டுடன் வாழ்த்து!

Saturday, May 7th, 2022

தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றி, 43 வருடங்களுக்குப் பின்னர் வடக்கு மாகாணத்திற்கு வெற்றிக் கிண்ணத்தை பெற்றுத்தந்துள்ள சற்குணம் காண்டீபனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சர்வதேச போடடிகளிலும் பங்குபற்றி எமது பிரதேசத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.

இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய 2022 ஆம் ஆண்டிற்கான 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் கலந்து கொண்ட காணடீபன், இறுதிப் போட்டியில் மேல் மாகாணத்தினை பிரதிநிதித்தவப்படுத்திய வீரரை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: