வடக்கு வெள்ளத்தின் நஷ்ட ஈடுகள் வார்த்தை ஜாலங்களாக இருக்காது பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, January 23rd, 2019

கடந்த வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும்  பாதிப்பிற்கு உட்பட்ட மக்களுக்கான நட்டஈட்டுத் தொகைகள் இன்னமும் உரிய முறையில் கிடைக்காத ஒரு குறைபாடு நிலவுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கடன் இணக்க சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மேற்படி வெள்ளப் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கான நட்டஈட்டுத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஏற்கனவே பலமுறை முன்வைத்திருக்கின்றேன். இருப்பினும் 10 ஆயிரம் ரூபா வீதமே வழங்கப்படும் எனக் கூறப்பட்டும், அந்த நிதிகூட உரிய ஏற்பாட்டில் இன்னமும் பலருக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

அதேநேரம், பயிரழிவு, கால்நடைகள் அழிவு உள்ளிட்ட இழப்புகள் தொடர்பிலும் விரைவான தீர்வுகள் இதுவரையில் எட்டப்படவில்லை. எமது மக்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்விற்கு ஆயத்தமாக வேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர்.

தங்களிடம் கேட்டுத்தான் அமைச்சரவையில் முடிவுகள் எட்டப்படும் என்றும், தங்களிடம் கேட்டுத்தான் வடக்கு – கிழக்கில் ஆனைத்ம் நடக்கும் என்றும் கூறித் திரிகின்ற அரசுடன் ஆட்சியில் இணைந்திரக்கின்ற தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் இது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை இதுவரையில் எடுத்திருக்கிறார்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

Related posts: