வடக்கு வாழ் இந்து குருமார்கள் ஒன்றியத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விஷேட சந்திப்பு!

Sunday, August 2nd, 2020

வடக்கு வாழ் இந்து குருமார்கள் ஒன்றியத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இன்றையதினம் விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்றையதினம் (2) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதது.

குறித்த நிகழ்வை புத்தசாசன கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்து மத விவகார இணைப்பாளர் சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது ஒட்டுமொத்த இந்து குருமார்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய ஒரு கலந்துரையாடலாகவே  இது ஏற்பாடு செய்யப்பட்டு கலந்துரையாடப்பட்டது. இதன்போது, வேதபாராயணம் தேவாரம் சிறப்புரை மதிப்புரை பாராட்டுரை பாராட்டுக்கள் இடம்பெற்றது.

இதன் போது, புத்தசாசன கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்து மத விவகார இணைப்பாளர் சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இராஜ கிரீடம் அணிவித்து, பொன்னாடை போர்த்ததி ,வாழ்த்துமடல் வழங்கியதுடன் ஜனாநாயகத்தின் காவலன் என்னும் பட்டமும் வழங்கி கௌரவித்திருந்ததுட்ன கடந்த காலங்களில் இந்துமத்ததின் வளர்ச்சிக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய அளப்பெரிய பணிகள் தொடர்பிலும் எடுத்துக்கூறியிருந்தார்.

அதன்பின்னர், அமைச்சர். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜெகதீஸ்வர குருக்கள் தலைமையில் இந்துமத சபை ஒன்றுக்கான நிர்வாக கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ஆலோசனையையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Related posts: