வடக்கு மாகாண கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்!

கொவிட் 19 காரணமாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்குடனான விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், நடைபெற்று வருகின்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர்கள் ஆகியோருடன் கடற்றொழி்ல் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
கொறோனா காரணமாக கடலுணவுகளை வடக்கு மாகாணத்திற்கு வெளியே எடுத்துச் செல்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளமையினால், கிடைக்கின்ற அறுவடைகளை விற்பனை செய்து கொள்வதில் பிரச்சினைகள் எதிர்கொள்ளப்படுகின்ற நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பாக
ஆராயப்படுகின்றது.
குறிப்பாக, உற்பத்தி செய்யப்படுகின்ற கருவாடுகளை சதோச ஊடாக விற்பனை செய்வது தொடர்பாகவும், இறால், நண்டு, கணவாய் போன்றவற்றை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடி வருகின்றனர் –
L
Related posts:
|
|