வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரிசனை!

வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை வடபிராந்திய போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளர் குணபாலச்செல்வம் மற்றும் போக்குவரத்து சபையின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் வட மகாணத்தில் இருக்கக்கூடிய வெற்றிடங்களை நிரப்புதல், வடபிராந்திய தொழிற்சங்கத்தை பதிவு செய்தல், வடபிராந்திய போக்குவரத்து மேன்முறையீட்டு நீதி மன்றத்தை மீண்டும் இயங்க வைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும், கடந்த மார்ச் 21 திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி – யாழ் வாழ்வாதார அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம அவர்களினால் வட பகுதிக்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்ட வேலைகளை முன்னகர்த்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|