வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய கடல் வள தொழில் துறை முயற்சிகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

கடல் தொழில் நீரியல் வள அதிகாரிகளுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய கடல் வள தொழில் துறை முயற்சிகள் தொடர்பில் கடல் தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனைகளை மேற்கொண்டார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது தீவுப் பகுதியில் நீரியல் வள உற்பத்திகளை அதிகரிப்பது
தொடர்பாகவும் அதனை முன்னெசுக்கக் கூடிய சாதக பாதகங்கள் தொடர்பாகவும் கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சு வடக்கின் துறைசார் அதிகாரிகளுடன்
ஆராய்ந்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் கடல் வளங்களை அதிகரிப்பதற்கு காணப்படும் வாய்ப்புக்கள் தொடர்பான கருத்துக்களை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் முதற் கட்டமாக தீவுப்பகுதியில் ஆரம்பிக்க திட்டமிடப்படும் குறித்த நடவடிக்கை ஏனையா பகுதிகளுக்கு விஸ்தரிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

Related posts:
|
|