வடக்கு மாகாணத்தில் புதிய உள்ளூராட்சி நிர்வாகங்கள் ஏற்படுத்தப்படுவதுடன் தரமுயர்த்தப்படவும் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, July 23rd, 2019

தற்போது வடக்கு மாகாணத்திலே செயற்பட்டு வருகின்ற சில நிர்வாக அலகுகள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் நான் பலமுறை இங்கே முன்வைத்து வந்துள்ளேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற  நிர்வாக மாவட்டங்கள் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலே தற்போது செயற்பட்டு வருகின்ற சாவகச்சேரி பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரித்து சாவகச்சேரி பிரதேச செயலகம் என்றும் கொடிகாமம் பிரதேச செயலகம் என்றும் இரு பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

35 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட கொழும்பு பிரதேச செயலகத்துடன் மேலும் நிலப் பகுதிகள் இணைக்கப்படுகின்ற நிலையில் 60 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட சாவகச்சேரி பிரதேச செயலகத்தைப்   பிரித்து இரண்டு செயலகங்களாகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என்றே கருதுகின்றேன்.

அதேபோன்று தற்போது செயற்பட்டு வருகின்ற கோப்பாய் பிரதேச செயலகத்தையும் கோப்பாய் பிரதேச செயலகம் அச்சுவேலி பிரதேச செயலகம் என இரண்டாகப் பிரிக்க வேண்டிய தேவையும் உணர்த்தப்பட்டு வருகின்றது.

அதேநேரம் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளு+ராட்சி அமைச்சு இன்றைய இந்த விடயத்துடன் தொடர்புபட்டிருப்பதால் உள்ளு+ராட்சி மன்ற நிர்வாகத் தேவைகள் குறித்தும் சில விடயங்களை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.

குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது செயற்பட்டு வருகின்ற கரைச்சி பிரதேச சபையின் கீழேயே கிளிநொச்சி நகரும் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நகரின் தேவைகள் அதிகரித்து வருகின்றமை காரணமாக கிளிநொச்சி நகரினதும் தேவைகளை அவதானத்தில் கொண்டு ஒரு நகர சபையினை கரைச்சி பிரதேச சபைக்கு மேலதிகமாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டி இருக்கின்றது.

அதேநேரம் முல்லைத்தீவு மாவட்த்திலும் புதிதாக ஒரு பிரதேச சபை ஒட்டுசுட்டான் பிரதேச சபை என உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நான் ஏற்கனவே முன்வைத்திருந்தேன். அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது. எனினும் அதன் தற்போதைய நிலை என்ன என அறிய விரும்புகின்றேன்

கிளி மாவட்டத்தில் புதிதாக அக்கராயன் பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும். வவுனியா மாவட்டத்தில் வவுனியா மேற்கு பூவரசங்குளத்தினை மையமாகக் கொண்ட ஒரு புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளத்தினை மையமாகக் கொண்டு மேலதிகமாக ஒரு பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கு அப்பால் உள்@ராட்சி என்று வரும்பொழுது வுவனியா நகர சபையை மாநகர சபையாக தரமுயர்த்த வேண்டும். 

கிளிநொச்சி முல்லைத்தீவு நெல்லியடி சுன்னாகம் மானிப்பாய் சங்கானை ஆகிய நகரங்களை நகர சபைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.

வடமராட்சி கிழக்கு கண்டாவளை மடு மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலங்களில் அதாவது ஒதுக்கப்பட்டு அமுல்படுத்தப்படாத கிராம அதிகாரி பிரிவுகள் தரப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

"எமக்கான எதிர்காலத்தை நீங்களே பெற்றுத்தரவேண்டும்" டக்ளஸ் தேவானந்தாவிடம் வட்டக்கச்சி மக்கள்...
கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை மட்டும் பரிகாரமாகாது – டக்ளஸ் எம்.பி சுட்ட...
தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாடில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறப்பு கலந்துரையாட...