வடக்கு மக்கள் தங்களது விவசாய நிலங்களுடன்  கடல் வளத்தையும் இழந்து நிற்கின்றார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, December 7th, 2016

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற இன்னுமொரு பாரிய நெருக்கடி பிற மாவட்டக் கடற்றொழிலாளர்கள் அங்கு அத்துமீறியதும், தடை செய்யப்பட்டதுமான கடற்றொழில்களில் ஈடுபடுவதாகவும்,குறிப்பாக, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியில் ஆழ்கடல் தொழிலில் ஈடுபடுகின்ற கடல்தொழிலாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற கிராமங்களில் வாழுகின்ற மக்கள் தங்களது விவசாய நிலங்களையும், தங்களது கடல் வளத்தையும் இழந்து நிற்கிறார்கள். ஆழம் குறைந்த அவர்களது கடல் பரப்பில் சிறு தொழில்களை அவர்கள் மேற்கொள்கின்றபோது, பிற பகுதிகளிலிருந்து அங்கு அத்துமீறி நுழையும் கடற்றொழிலாளர்கள் இயந்திரப் படகுகள் மூலம் தடை செய்யப்பட்ட உபகரணங்களால், வர்த்தக ரீதியிலான தொழில் செய்து இந்த மக்களின் வாழ்வாதாரங்களை இல்லாதொழிப்பதுடன், அவர்களது தொழில் உபகரணங்களையும் அழித்து வருகின்றனர் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றையதினம்(06) கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதுமாத்தளன் பகுதியில், அப்பகுதியில் தடைசெய்யப்பட்டுள்ள  நிலையில், அத்துமீறி, தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டு, கடலட்டைப் பிடிப்போரால் அந்த மக்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலை, வடக்கு, கிழக்கு மகாணங்களில் பல பகுதிகளிலும் தொடர்வதாகவே அறிய முடிகின்றது.

அதே நேரம், கிழக்கு மாகாணத்தில் நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்டு வருகின்ற கடலரிப்பு காரணமாக அங்குள்ள கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,வான் வெட்டப்படாமை காரணமாக பானந்துறை கடற்றொழிலாளர்கள் தங்களது  தொழிலில் ஈடுபடுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாகவும்,

அம்பாறை, அறுகம்பே கடற்கரைப் பகுதிகளில் அதிகரித்து வரும் கட்டிடங்கள் காரணமாக அங்குள்ள கடற்றொழிலாளர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ள இயலாது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

எனவே, எமது கடற்றொழிலாளர்கள் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து மீண்டு, சுதந்திரமாக அவர்கள் தொழில் துறையில் ஈடுபடக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு கௌரவ அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் வழி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-6 copy

Related posts:

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தோல்வி கண்டவர்கள் நாங்கள்- மணியந்தோட்டம் மக்கள் டக்ளஸ் தேவ...
நந்திக்கடல் பிரதேசத்தை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதார பாதிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்...
கொழும்பு இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள் - வலி வடக்கு மக்கள் மத்தியில் டக்ள...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களை மட்டுமன்றி தங்களது ஆதரவாளர்களையும் ஏமாற்றி வருகின்றது -...
நாம் குற்றவாளி அல்ல சுற்றவாளி என்பதை நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது - யாழில் ஊடகவியலாளர் மத்திய...