வடக்கு, கிழக்கு கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதுடன் விஷேட ஏற்பாட்டில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 25th, 2016

யுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழ் நாட்டிலே அகதி முகாம்களில் அகதிகளா இருந்துவரும் இலங்கைத் தமிழ் மக்களை இலங்கைக்குத் திருப்பியழைக்கும் வகையில் உள்ளக அலுவல்கள் அமைச்சு பல  ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமெனை நான் ஏற்கனவே கோரியிருந்த நிலையில் அதற்கமைவாகச் சில ஏற்பாடுகள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.  எனினும், தற்போது நாடு திரும்புகின்ற அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் முதல் ஏற்கனவே வாக்களித்திருந்த எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றாதிருப்பதனை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுகூர விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –

அதேநேரம், கடந்த கால யுத்த அனர்த்தங்கள் காரணமாக நலிவடைந்துள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கலைஞர்களையும் இலக்கியவாதிகளையும் கௌரவிக்கும் ஒரு விஷேட ஏற்பாடாக அவர்களுக்கான ஓர் ஓய்வூதியத் திட்டத்தைச் செயற்படுத்தவும் ஏற்கனவே சில இடங்களில் அமைக்கப்பட்டது போல் அனைத்துப் பிரதேச செயலகங்கள் தோறும் கலாசார நிலையங்கள் அமைத்து அதற்குரிய ஆளணி வசதிகளை ஏற்படுத்தவும் பாரம்பரிய கலைகளை மேம்படுத்தவும் பாரம்பரிய கலைஞர்களைக் கௌரவித்து ஊக்குவிக்கவும் கௌரவ அமைச்சர் எஸ்.பி. நாவின்ன அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

000

Related posts:

மனிதாபிமான ரீதியில் அவதானம் செலுத்துங்கள் - நீதி அமைச்சரிடம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!
யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்தபோதிலும் கடற்றொழி லாளர்களது பிரச்சினைகள் தீராதிருப்பது வேதனை யள...
“கம்பரலிய” திட்டம் கண்கட்டி வித்தையாகவே நடந்தேறுகின்றது - நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெ...