வடக்கு கிழக்கில் சுதேச மருத்துவத்துறையை மேம்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Wednesday, March 27th, 2019

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே ஏற்கனவே சுதேச மருத்தவத்துறையில் நீண்ட காலமாக ஈடுபட்டிருந்த பல மருத்துவர்கள் கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களால் பேணி வளர்க்கப்பட்டிருந்த மூலிகைத் தோட்டங்கள் பலவும் அழிந்துவிட்டுள்ளன. எனவே, எமது பகுதிகளில் சுதேச மருத்துவத்துறையை பேணி, வளர்க்கும் நோக்குடன், மேற்படி பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு ஒரு விசேட ஏற்பாடாக இழப்பீட்டுத் தொகை ஒன்றை வழங்குவதற்கும், மூலிகைத் தோட்டங்களை மீள உருவாக்குவதற்கும், சுதேச மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.

அந்த வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் தனது அவதானத்தைச் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும், அதே நேரம் வடக்கு மாகாண சுகாதாரத்துறை மேம்பாடு தொடர்பில் மாகாண சபையின் சுகாதாரத்துறை சார்ந்தோருக்கு வழிகாட்டல்களை மேற்கொள்வதற்குமான நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சர் அவர்கள் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இயற்கை அனர்த்தம் வேதனை தருகிறது! இலங்கை அரசு, இந்தியா உட்பட வெளிநாடுகளினதும், எமது மக்களினதும் மனி...
நீருக்கான தட்டுப்பாடு நிலவும் நமது நாட்டில் இயற்கை நீர் வளங்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்ப்...
இடர்பட்ட எமது மக்களின் வாழ்வை புதிய பாதையில் முன்னெடுத்துச் செல்வதே எமது நோக்கமாகும்  - முல்லைத்தீவி...
எங்கள் மக்களின் இழப்புக்களுக்கு, இழப்பீட்டுக்கொடுப்பனவுகள் ஆறுதலாகவே இருக்கும். அமைச்சர் டக்ளஸ் தேவ...
சதுப்பு நிலங்கள் அழிகின்றமை மனித குலத்துக்கே ஆபத்து – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!