வடக்கு – கிழக்கில் ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான தலைவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, May 9th, 2019

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்காளக செயற்படுகின்றவர்கள் யார்? மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களினது உப தலைவர்களாகவும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களாகவும் செயற்படுகின்ற அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேர விவாதத்தின்போது உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களிடமே இவ்வாறு கெள்வியெழப்பியிரந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட மட்டத்திலும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு பிரதேச மட்டத்திலும் தமது அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து அபிவிருத்திக் கருத்திட்டங்களையும் ஒருங்கிணைக்கின்ற மற்றும் மேற்பார்வை செய்கின்ற பிரதான குழுக்களாக அமைகின்றன.

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகண சபைகள் மற்றும் உள்@ராட்சி அமைச்சின் 13.02.2019 ஆம் திகதியையும் 4ஃ2019ஆம் இலக்கத்தையும் கொண்ட  சுற்றறிக்கையின் பிரகாரம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவானது,  அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரே~;ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்  ஒருவரை தலைவராகவும், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரே~;ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை உப தலைவராகவும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவானது அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தலைவராகவும், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாகாண சபை உறுப்பினர் ஒருவரை உப தலைவராகவும் கொண்டிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் மேற்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைவாக பின்வரும் கேள்விகள் எழுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டு வருகின்ற அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான தலைவர்கள் மற்றும் உப தலைவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்?

மாகாண சபைகளின் உத்தியோகப்பூர்வ காலம் முடிவடைந்துள்ள நிலையில், அந்த மாகாணங்களிலுள்ள பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் உப தலைவர் பதவி வகிப்போராக நியமிக்கப்பட்டிருப்போர் யார்?

மேற்படி சுற்றறிக்கைக்கு அமைவாக தற்போது செயற்பட்டு வருகின்ற மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு தலைவர்கள் மற்றும் உப தலைவர்கள் நியமிக்கப்படாத பட்சத்தில், அக் குழுக்களால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் செல்லுபடியாகுமா? அத் தீர்மானங்களுக்கு அரச அதிகாரிகள் கட்டுப்பட முடியுமா?

மேற்படி சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்படிக் குழுக்களுக்கு தலைவர்கள், உப தலைவர்கள் நியமிக்கப்படாதிருப்பின் மேற்படி சுற்றறிக்கை எந்த வகையில் செல்லுபடியாகும்? என்பதையும்,   மேற்படி சுற்றறிக்கைக்குப் புறம்பாக தலைவர்கள், உப தலைவர்கள் நியமனங்கள் மேற்கொள்ள முடியும் எனில், அது தொடர்பில் மேற்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்படாதது ஏன்? என்பதையும் கூற முடியுமா? மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கத்தையும் அமைச்சர் வஜிர அபேவர்தன் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்

Related posts:

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 10 நாள்களில் 10 ஆயிரம் கட்டில்கள் திட்டம் - வடக்கு மாகாண சுகாதாரப் பணிப...
பலாலி வடக்கிற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – பூர்வீக மக்களுக்கே முன்னுரிமை வேண்டும் என அன்ரனிபுரம் மக்க...
யாழ்ப்பாணம் பிரதேச கடற்பரப்புகளில் சிறு தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களது இடர்பாடுகளுக்...

தமிழ் மொழி கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களூடாக மக்கள் நலன்களை முன்னெடுத்து  சாதித்துக் காட்டுங்கள் - கிளிநொச்சியில...
யாழ் மாவட்ட நிலைமைகள் தொடரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரைய...