வடக்கு – கிழக்கில் உயிரிழந்த ஊடகவியலாளர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு விN~ட திட்டம் வேண்டும்!

Sunday, December 10th, 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொள்ளக்கூடிய வகையில் ஒரு விN~ட திட்டம் என்ற அடிப்படையில் ஒரு நிதியுதவித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்,

வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்களுக்கென ஒரு வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கிலே செயற்பட்டு வருகின்ற சில ஊடக நிறுவனங்கள் – அந்த நிறுவனத்தில் தொழில் செய்கின்ற நிலையில் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அல்லது இறக்க நேரிடும் ஊடகவியலாளர்களுக்கென்று எவ்வித கொடுப்பனவுகளையும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்காத ஒரு நிலையே காணப்படுகின்றது.

எனவே, தனியார் ஊடக நிறுவனங்கள் என்ற போதிலும், ,வற்றில் பணி புரிகின்ற ஊடவியலாளர்களது நலன்களைப் பேணத்தக்க சில ஒழுங்கு விதிகளை இந்த நாட்டின் ஊடகத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எடுக்க வேண்டும் என்றும் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், அரச தொலைக் காட்சிகளிலும், வானொலிகளிலும் தமிழ்ச் சேவைகளில் தேசிய கீதம் ஒலி – ஒளிபரப்பப்படும்போது, அதனைத் தமிழ் மொழியில் ஒலி – ஒளிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

Related posts:

டக்ளஸ் தேவானந்தாவின் சேவைகள் மீண்டும் தொடரவேண்டும் - சான்றோர் சனசமூக நிலைய பிரதிநிதிகள் கோரிக்கை
இரணைமடுக் குளத்தினை மேலும் விஸ்தரிப்பதற்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி - கிளிநொச்சியில் அம...
ஜனாதிபதி ரணிலின் மீதான எதிர்பார்ப்புகள் வெறும் நம்பிக்கை அல்ல - கடந்தகால செயற்பாடுகளின் அனுபவம் – அ...

எமது கட்சியின் அரசியல் வழிமுறைப்பாதையே சரியானதென வரலாறு நிரூபித்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கடை முகாமையாளர்களுடனான சந்திப்புக் குறித்து இராஜாங்க அமைச்சர் ப...
“டூனா” மீனுக்கு நிர்ணய விலை - முறையான கொள்கைத் திட்டம் அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பலநா...