வடக்கு – கிழக்கிற்கு சமச்சீரற்ற விசேட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, September 24th, 2017

தற்போது நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள அரசியல் திருத்த யாப்பில் நாம் வலியுறுத்திவந்ததன் பிரகாரம் சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்திற்கு மேலாக மேல் சபை என்ற ஒரு சபையும் உருவாக்கப்பவதற்கான பரிந்துரை ஊஏற்கப்பட்டள்ளது.. இதில் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவம் 50 இற்கு 50 என்றவாறு அமையப்பெற வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் தேசிய நீர்ப்பாசன வடிகாலமைப்பு சபையின் ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பாக செயலாளர் நாயகத்துடன்  கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த ஊழியர்களது பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தறிந்துகொண்டபின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாடாளுமன்றத்தில் தற்போது பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களே அதிகளவு பிரதிநிதித்துவம் செய்துவரும் நிலையில் உருவாக்கப்படவுள்ள மேல் சபையிலும் அதேவிதமாக அமையுமாக இருந்தால் அச்சபையின் உருவாக்கலுக்கான நோக்கம்  அர்த்தமற்றதொன்றாகிவிடும். அந்தவகையில் குறித்த மேல்சபையில் சிறுபான்மையின மக்களுக்கும் சரிபாதி உரிமை வழங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

மேலும் பொலிஸ் மற்றும் முப்படையில் இன விகிதாசாரம் பேணப்படவேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் பிரச்சினை நாட்டின் ஏனைய மாகாணங்களில் இருக்கின்ற மக்களின் பிரச்சினையை விட வேறுபட்ட வகையில் இருப்பதால் இதை சீர்செய்வதற்கு சமச்சீரற்வகையில் விசேட அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளதுடன் பெண்களுக்கு சம உரிமையான அரசியல் பங்களிப்புக்கள் வழங்கப்படவேண்டும். மதச்சார்பற்ற நாடாக இலங்கை இருக்க வேண்டும் – உள்ளிட்ட பல கருத்தக்களை நாம் வலியுறுத்தியுள்ளோம்  என்றும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் உடனிருந்தார்.

Related posts:

அனைத்து ஆட்சியாளர்களின் காலத்திலும் எமது மக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் – நர்டாளுமன்றில் டக்ளஸ் எம்....
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பேன் - அல்லைப்பிட்டிஒளிவிழாவில் அமைச்சர்...
'சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி' - அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே,டக்ளஸ் தேவானந்தா ஆ...