வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடியாளர்கள் விவகாரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!
Monday, February 26th, 2024இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடியாளர்கள் அண்மைக்காலத்தில் அதிகமாக கைது செய்யப்படுகின்ற நிலையில் அவ்விவகாரம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின்போது கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, அமைச்சின் செயலாளர், இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகளுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கூட்டுத்தாபனத்தின் மோதரைத் துறைமுகம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
000
Related posts:
|
|