வடக்கில் 14 தபாலகங்கள் தனியார் கட்டிடங்களிலேயே இயங்குகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 8th, 2016

கடந்தகால யுத்தம் காரணமாக வடக்கில் 6 உப தபாலகங்கள் இதுவரையில் மீளத் திறக்கப்படாதுள்ளன. (யாழ்ப்பாணத்தில் மையிலிட்டி, தையிட்டி – கிளிநொச்சியில் முகமாலை – மன்னாரில் பண்டாரவெளி, முள்ளிக்குளம் – முல்லைத்தீவில் கொக்குத்தொடுவாய்). அவை தொடர்பிலும், மக்கள் தற்போது அதிகளவில் மீளக் குடியமர்த்தப்பட்டு வருவதால், அக் குடியேற்றங்களின் தேவைக்கு ஏற்ப வடக்கு மாகாணத்தில் புதிய தபாலகங்களைத் திறப்பது குறித்தும் அவதானம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (08) வரவு – செலவுத் திட்டத்தின் புத்ததாசன அமைச்சு, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சுத் தொடர்பான குழு நிலை விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து  தெரிவிக்கையில் –

மேலும், யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 14 தபாலகங்கள் இன்னும் தனியார் கட்டிடங்களிலேயே இயங்கி வருவதால், இவற்றுக்கான கட்டிட ஏற்பாடுகளுக்கான  நடவடிக்கைகளை எடுக்கும்படியும்; கேட்டுக் கொள்வதுடன், இதற்கு முன்னர் எமது நாட்டில் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சினால் முஸ்லிம் கலைஞர்கள், இலக்கியவாதிளுக்கு விருதுகள் மற்றும் நிதிக் கொடைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதைப்போல், இன்று சமூகத்தில் இருக்கின்ற முஸ்லிம் கலைஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளை ஊக்குவித்து, கௌரவிப்பதற்கும்,  மேலும், பள்ளிவாயில்கள் தோறும் மத்ரஸாக்கள் மூலமான கல்விமுறைமையைக் கட்டியெழுப்பும் முகமாகவும், அதனை ஊக்குவிக்கும் முகமாகவும் அந்தக் கற்கை நெறிகளைப் போதிக்கின்ற மௌலவிமாருக்கு ஒரு மாதாந்த ஊதியத் தொகையை தொடர்ச்சியாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கும் படியும் கௌரவ அமைச்சர் ஹலீம் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

epdp news

Related posts:


வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை விசாரணைகளுக்கு என்ன நடந்தது :  கண்கண்ட சாட்சியாக நானே இருக்கிறேன் – ந...
ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்க...
கொழுப்பு பேருவளை துறைமுகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு!