வடக்கில் விவசாயத் துறையையும் நீரியல் வள செய்கையினையும் ஒரே நேரத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் முன்னெடுப்பேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, August 23rd, 2020

வடக்கு மாகாணத்தில் விவசாயத்திற்கு பொருத்தமான பாரியளவு வயற் காணிகள் மற்றும் தோட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன.

இத்தகைய குளங்களையும் வாவிகளையும் மீள பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் ஊடாக விவசாயத் துறையையும் நீரியல் வள செய்கையினையும் ஒரே நேரத்தில் மக்கள் பயன்பெறுகின்ற வகையில் மேற்கொள்ள முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஜனாதிபதி அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இத்தகைய காணிகள் அனைத்தையும் விவசாய செய்கைக்காக விடுவித்து மானிய மற்றும் இலகு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய செய்கையை மேம்படுத்தி பரவலாக்குவதும் அதிகூடிய விளைச்சலை ஏற்படுத்துவதும் எமது நோக்கமாக இருக்கின்றது.

இதன் மூலமாக நெல் உள்ளிட்ட உப உணவுப் பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்வதன் ஊடாக அவற்றின் இறக்குமதிகளை நிறுத்தி உணவு உற்பத்தியில் எமது நாட்டை தன்னிறைவு காணச் செய்வதே எமது ஆரம்ப இலக்காகும்.

அதன் அடுத்த இலக்கு ஏற்றுமதிக்கான வழியேற்படுத்தலாகும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன் குளங்கள் வாவிகள் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பிலும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களது கருத்து தெரிவித்துள்ளார்.

இத்தகைய குளங்களை வாவிகளை மீள பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் ஊடாக விவசாயத் துறையையும் நீரியல் வள செய்கையினையும் ஒரே நேரத்தில் மக்கள் பயன்பெறுகின்ற வகையில் மேற்கொள்ள முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


புதிய அரசியலமைப்பு 13ஆம் திருத்த த்தைவிடவும் மேம்பட்ட தாக அமைந்தால் வரவேற்போம்-  செயலாளர் நாயகம் டக்...
யதார்த்தவாதிகளையே மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும் - ஊடக சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்...
காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...