எங்கள் ஒளிவிளக்கு டக்ளஸ் தேவானந்தா !யாழில் அலுவலகத்தை திறந்துவைத்து முஸ்லிம்கள் புகழாரம்!

Monday, July 20th, 2020

நீண்டகாலமாக பல துன்ப துயரங்களை சந்தித்துவரும் முஸ்லிம் மக்களுக்கு ஒளிவிளக்காக திகழ்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே. அந்தவகையில் நாம் அவரது பாதையில் பயணித்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கரங்களை பலப்படுத்த ஒன்றிணைவோம் என யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

இலக்கம் 64, முஸ்லிம் கல்லூரி வீதி, சோனகர் தெரு யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் ஈழ மக்கள ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட முஸ்லீம்களுக்கான கிளை அலுவலம் நேற்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் இவ்வாறு; தெரிவித்தனர்.
இதன்போது அலுவலகத்தை திறந்துவைத்த உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில்,
முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான திறவுகோலாக எதிர்வரும் ஓகஸ்ட் ஆம் திகதி பயனபடுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் முஸ்லீம் மக்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் இருந்து துரத்தப்பட்டபோது, அவர்களுக்காக குரல் கொடுத்து பல்வேறு உதவிகளையும் செய்திருந்தமையை இதன்போது அமைச்சர் நினைவுபடுத்தினார்.
முன்பதாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து நீண்டகாலம் தாம் யாழ்ப்பாணத்திற்கு மீளக்குடியேறியுள்ளபோதும் தமது எதிர்காலம் தொடர்பில் தமது சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் எவரும் அக்கறைகொள்ளாமையால் தாம் நிர்க்கதியாகவுள்ளதாகவும் தமது எதிர்கால வாழ்க்கையை சிறப்பானதாக அமைப்பதற்கு எதிர்வரும் காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழியை தாம் பின்பற்றவுள்ளதாகவும் தெரிவித்து தங்களுடைய ஆதரவினை தெரிவித்திருந்தனர்
அந்தவகையில் இன்றையதினம் அதற்கான ஏற்டுபாடுகளை மேற்கொண்டிருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் அலுவலகத்தை திறந்துவைத்ததுடன் முஸ்லிம் மக்கள் வளம்பெற வேண்டுமானால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியியின் பலம் ஓங்கவேண்டும் என்றும் அதற்காக வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள் ஒன்றுதிரண்டு அமைச்சரல் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வாக்களிக் அணிதிரளவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

Related posts:


உரிய அதிகாரங்கள் பகிரப்படும் போதுதான் தேசியப் பிரச்சி னைக்கு தீர்வு காணமுடியும் -  வவுனியாவில் செயலா...
சாவகச்சேரி சந்தை வியாபாரிகளது பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!
இரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  - நாடாளுமன்றில்...