வடக்கில் மண்ணெண்ணை பிரச்சினைக்கு முதற் கட்டத் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திட்ட வரைபு!
Thursday, May 26th, 2022கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான மண்ணெண்ணையை கடற்றொழிலாளர்கள் மத்தியில் பங்கிடுவதற்கான பொறிமுறை தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்களம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது, கடற்றொழில் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற பெயர் பட்டியலின் அடிப்படையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மண்ணெணாணையை விநியோகம் செய்வதற்கும், விநியோக நடவடிக்கைகளை கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் மேற்பார்வை செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாத நிலையிலுள்ள கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனையடுத்து, நேற்று சுமார் 33 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணை யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாளையும் தலா 33,000 லீற்றர் மண்ணெண்ணை எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளன.
அதேபோன்று வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களும் முதற் கட்டமாக கணிசமானளவு மண்ணெண்ணை எடுத்துவர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,
“முதற் கட்டமாக ஒரு தொகுதி எண்ணெய் எடுத்து வரப்படுகின்றது. அவற்றில் கணிசமானளவு கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன் ஏனையலர்களுக்கும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கான மண்ணெண்ணை விநியோகம், யாழ் மாவட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதை போன்றே ஏனைய மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட தரப்புக்களின் கூட்டு செயற்பாட்டின் ஊடாக பகிர்ந்தளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
000
Related posts:
|
|