வடக்கில் செயலிழந்துள்ள பல்வேறு கைத்தொழில் முயற்சிகளை விரைவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, March 19th, 2021

வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் அபிவிருத்துக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரைவான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீளச் செயற்பட ஆரம்பிக்கவிருக்கும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை குறித்தும், அதன் செயற்பாடுகளுக்கு அவசியமான உப்பு உற்பத்தியை மேம்படுத்துவது குறித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போதே இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அத்துடன் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும் அதுபோன்று வடக்கில் செயலிழந்துபோயிருக்கும் பல்வேறு கைத்தொழில் முயற்சிகளையும் விரைவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: