வடக்கில் கடலுணவு வருமானம் அதிகரிப்பு – வினைத்திறன் மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் நன்றியும் தெரிவிப்பு!

கடந்த இரண்டு வருங்களில் வடக்கு மாகாணத்தில் மீன், இறால், நண்டு., கடலட்டை வருமானம் அதிகரித்திருக்கின்றது.
இதற்கான வினைத்திறன் மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பாராட்டுக்களையும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் எக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
முன்பதாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களை வலுப்படுத்தும் நோக்குடன் கடற்றொழிலாளர் அமைப்புக்களை புனரமைத்து சீர்ப்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இதன்போதே கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகங்களை சீர்படுத்தி, தேவையான பதிவுகளை மேற்கொண்டு கடற்றொழிலாளர் நலன்சார் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|