வடக்கில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.
Tuesday, March 6th, 2018வடக்கு மாகாணப் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆங்கில ஆசியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.0
நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற 23/2 நிலையியற் கட்டளை மீதான கோள்வி நேரத்திலேயே குறித்த கோரிக்கையை டக்ளஸ் தேவானந்தா முன்வைத்திருந்தார்.
யாழ்ப்பாணம் குருநகர் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த 2016 – 2017 மற்றும் 2018ஆம் கல்வி ஆண்டுகளில் ஆங்கில டிப்ளோமா பட்டம் பெற்று சுமார் 83 மாணவர்கள் வெளியேறியுள்ள நிலையில் இதுவரையில் இவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறாத நிலைமை காணப்படுகின்றது.
இந்நிலையில் இம்மாணவர்கள் வாழ்வாதாரங்கள் இன்றி மிகவும் கஸ்டமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போதும் வடக்கு மாகாணத்தில் கணிதம் விஞ்ஞானம் உள்ளடங்களாக ஆங்கில பாட ஆசியர்களுக்குமான வெற்றிடங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
எனவே மேற்படி பட்டதாரி மாணவர்களை ஆங்கில ஆசிரியர்களாக சேவையில் இணைத்து வடக்கு மாகாணப் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆங்கில ஆசியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
Related posts:
|
|