வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் – ஜனவரி முதல் வாரத்தில் ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தின்போது ஆரம்பித்து வைக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Tuesday, December 19th, 2023

வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் ஜனவரி 4, 5, 6 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின்  வடக்கிற்கான விஜயத்தின்போது  ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் யாழ்/கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இன்று (19.12.2023) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்  அ. சிவபாலசுந்தரன், நீர்ப்பாசன நீர்வழங்கல் முகாமையாளர்கள், யாழ். மாநகர முன்னாள் ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர்  என். சுதாகரன் பாலியாற்று குடிநீர்த் திட்டம் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார்.

இத்திட்டம் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அது கைகூடாத நிலையில்  கடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டடிருந்தமை

இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைச்சரவை இத்திட்டத்திற்கு 250 மில். ரூபாவை ஒதுக்குவதற்கான அங்கீகாரம் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

சந்தர்ப்பங்களை பயன்படுத்தாதவர்கள் ஆலோசனை சொல்வது வேதனையளிக்கின்றது - டக்ளஸ் தேவானந்தா!
மக்களின் வாழ்க்கை முறைமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் நன்மை தரக் கூடிய திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி – ...
வாழ்வாதார மேம்பாட்டுக்காக நலத்திட்டங்களில் மட்டும் தங்கியிராது சுயதொழில் முயற்சிகளிலும் கூடுமானவரை ஈ...

எமது அரசியல் போராட்ட வழிமுறை சரியானது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றத...
சரணாகதி அரசியல் செய்வது யார் என்பதை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர் – யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் எம்.பி. தெர...
நன்னீர் நிலைகளில் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பு - புதுமுறிப்பு பகுதியில் புனரமைக்கப்படும் தொட்டிகளை பா...