வடக்கின் மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, December 7th, 2016

வடக்குமாகாணத்தைப் பொறுத்தவரையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான பற்றாக்குறையேஅதிகமாகக் காணப்படுகின்றது. இதனைகௌரவ அமைச்சர் அவர்கள் அவதானத்தில் கொள்வார் எனநினைக்கிறேன். குறிப்பாக, வடக்குமாகாணத்தில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள 820 கீழ்நிலைப் பணியாளர்கள் கடந்த க~;டமானகாலகட்டங்களிலிருந்து இதுவரைஎவ்விதமானகொடுப்பனவுகளும் அற்றநிலையில் கடமையாற்றி வருவதுபற்றி ஏற்கனவே கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டுவந்துள்ளேன். அந்தப் பணியாளர்களது எதிர்காலம் கருதியும், அங்குநிலவும் வெற்றிடங்கள் தொடர்பிலும் அவதானத்தில் கொண்டுகௌரவஅமைச்சர் அவர்கள் இந்தப் பணியாளர்கள் தொடர்பில் ஏதேனும் விஷேடமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனமீண்டும் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 05 ஆம் திகதி போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டுஉரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

குறித்த பணியாளர்களில் பலர் உரியதகுதிகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது. அந்தவகையில் அவர்களைநிரந்தரப் பணியில் இணைத்துக் கொள்வதற்கும்,உரியதகுதியினைக் கொண்டிராதவர்களுக்கு,அவர்களதுநீண்டகாலஅனுபவங்களைஅடிப்படையாகக் கொண்டும், தற்போதுகாணப்படும் ஆளணிப் பற்றாக்குறையைகவனத்தில் கொண்டும் அத் தகுதியினைப் பெற அவர்களுக்கு ஒருகால அவகாசத்தைவழங்கி ,கௌரவ அமைச்சர் அவர்கள் ஒருவிஷேட திட்டத்தை முன்னெடுக்கவேண்டும் எனஎதிர்பார்க்கிறேன்.

அதேநேரம்,வடக்குமாகாணத்தைப் பொறுத்தவரையில், தாதியர்களுக்கானபற்றாக்குறை அதிகமாகக் காணப்படும் நிலையில், உயர்தரத்தில் விஞ்ஞானப் பாடங்களில் சித்தியடைவோர் குறைந்துவரும் காரணத்தால்,கல்விப் பொதுத் தராதரசாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞானமும் கட்டாயப் பாடம்; என்பதால்,உயர் தரத்தில் ஏதாவதுபாடங்களில் திறமைச் சித்திபெறுகின்றவர்களுக்குதாதியர் பயிற்சிகளைவழங்குவதற்குஏற்றவகையில் ஒருகொள்கைத் திட்டமொன்றைவகுக்கக் கூடியசாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துபார்க்குமாறும்,

அத்துடன்,தனியார்துறைதாதியர் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு அரச தாதியர்களுக்கான பரீட்சைகளில் தோற்றக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தி, அதில் சித்தியடைவோருக்கு அரசமருத்து வமனைகளில் நியமனங்களை வழங்குவதற்குரிய வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-5 copy

Related posts: