வடக்கின் போர் மைதானத்திற்கு சென்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – இரு பாடசாலை வீரர்களுக்கும் வாழ்த்து!

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டதுடன் இருபாடசாலை வீரர்களையும் ஊக்குவித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டு கடந்து 114 ஆவது தடவையாக இடம்பெறும் முன்று தினங்களைக் கொண்ட இந்தத் துடுப்பாட்டப் போட்டி கடந்த 5 ஆம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது.
விஜயகாந்த் வியாஸ்கந்த் தலைமையில் யாழ். மத்திய கல்லூரி அணியினரும் நாகேந்திரராஜா சௌமியன் தலைமையில் சென். ஜோன்ஸ் கல்லூரியினரும் போட்டியில் மோதுகின்றனர்.
மைதானத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ். மத்திய கல்லூரி அதிபர் எழில் வேந்தன் சிறப்பான வரவேற்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|