வடக்கின் தொழில்துறை முயற்சிகளுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

நிதி அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களது வரவு – செலவுத் திட்டமானது நீலப் பசுமையாக இருந்தாலும், இதனை செயற்படுத்துகின்ற நிலையானது – தளமானது தற்போதைய நிலையில் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுவது குறித்து பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.
குறிப்பாக, கடற்றொழில் மற்றும் விவசாயத்துறையை எடுத்துக் கொண்டால், இதில் பாரியதொரு பங்களிப்பினை வடக்கு மாகாணத்தின் ஊடாக வழங்க முடியும். என்றாலும் அதற்குரிய வாய்ப்புகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா? என்பதே எனது கேள்வியாகும்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் முறையே இன்று வறுமை நிலைக்கு உட்பட்டுள்ள முதல் ஐந்து மாவட்டங்களாக இருக்கின்றன.
கடந்த கால யுத்தம் காரணமாக நேரடி பாதிப்புகளுக்கு அதிகளவில் உட்பட்ட மக்களாகவே வடக்கு – கிழக்கு மக்கள் உள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், இம் மக்களது மன வளத்திலும், பொருளதார வளத்திலும் விருத்திகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனினும், அவை முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
|
|