வடக்கின் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விஷேட திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில்இ தாதியர்களுக்கான பற்றாக்குறை அதிகமாகக் காணப்படும் நிலையில் இதற்கு மாற்று ஏற்பாடாக ஒரு விN~ட திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான சில யோசனைகளை இங்கு முன்வைக்கின்றேன். அவை தொடர்பில் ஆராய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வரமுடியுமென நினைக்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் சுகாதார போசணை சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பான குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
தாதியர் ஆட்சேர்ப்பிற்கென தற்போது நடைமுறையிலுள்ள 18 – 28 வயதெல்லையை 18 – 32 வரை அதிகரிப்பது.
ஆங்கிலப் பாடத்தில் சீ திறமை பெறாதவர்களுக்கு அத் திறமையைப் பெற ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அவர்களை இணைத்தக் கொள்வது.
தாதியர் சேவைக்கு விண்ணப்பங்கள் கோருகின்றபோது விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற வருடத்திலிருந்து பின்நோக்கிய 10 வருட காலத்திற்குள் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தினை முடித்துஇ அதில் சித்தி பெற்றவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்குவது.
தாதியர் ‘சேவிஸ் மினிட்’ பிரகாரம் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விகிதாசாரத்தினை அதிகரித்துஇ தகுதியான ஆண்களை இணைத்துக் கொள்வது.
உயர்தரத்தில் விஞ்ஞானப் பாடங்களில் சித்தியடைவோர் குறைந்து வரும் காரணத்தால் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞானமும் கட்டாயப் பாடம்; என்பதால் உயர் தரத்தில் ஏதாவது பாடங்களில் திறமைச் சித்தி பெறுகின்றவர்களுக்கு தாதியர் பயிற்சிகளை வழங்குவதற்கு ஏற்ற வகையில் ஒரு விN~ட கொள்கைத் திட்டமொன்றை வகுப்பது.
தனியாரத்;துறை தாதியர் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு அரச தாதியர்களுக்கான பரீட்சைகளில் தோற்றக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தி அதில் சித்தியடைவோருக்கு அரச மருத்துவ மனைகளில் நியமனங்களை வழங்குவதற்குரிய வாய்ப்புகள் குறித்து ஆராய்வது.
மேற்படி யோசனைகளை கௌரவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் ஆராய்ந்து ஒரு நல்ல தீர்வினை எடுப்பார் என நம்புகின்றேன்.
Related posts:
|
|