வடக்கின் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, November 22nd, 2017

மக்கள் தங்களுக்கான குடிசையைக் கட்டிக் கொள்வதற்காக ஒரு தடியினை வெட்டினாலே காடழிப்பு எனக் கூறி கைது செய்கின்ற சம்பவங்கள் நடக்கின்ற எமது மக்களது மண்ணிலே, பெறுமதிமிக்க பெருந்தொகையான மரங்கள், இயந்திரங்களைக் கொண்டு பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களால் வெட்டிச் செல்லப்படுவது காடழிப்பாகக் கொள்ளப்படுவதில்லை என்பது ஆச்சரியமான விடயமாக இருக்கின்றது – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் விவசாயம், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல், நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல், ஆரம்பக் கைத்தொழில் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

சூழலை சவாலுக்கு உட்படுத்துகின்ற செயற்பாடுகளால் காட்டு யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் தொல்லைகள் காரணமாக, மேற்கொள்ளப்படுகின்ற பயிர்ச் செய்கைகள்கூட அழிக்கப்படுகின்ற நிலைமைகள் தொடருகின்றன.

எனவே, வடக்கு மாகாணத்தில் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கெதிரான சட்டங்கள், தராதரங்கள் பாராது அனைவருக்கும் பொதுவானதாக வலுவுள்ள வகையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகின்றேன். என்றார்.

Untitled-8 copy

Related posts:


பண்டத்தரிப்பு சாந்தை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் -  டக்ளஸ...
தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரி...
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்...