வடகடல் நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்: நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு!

Thursday, March 5th, 2020

நோர்த் சீ எனப்படும் வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இன்றையதினம் குருநகரில் உள்ள வடகடல் நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுடனான சந்திப்பொன்றை முன்னெடுத்த அமைச்சரிடம் நிறுவனம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் நிறுவனத்தின் பணிப்பாளரால் எடுத்துக் கூறப்பட்டது.

குறிப்பாக கடந்தகாலத்தில் இன் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் பாகுபாடுகள் இருந்தமையால் நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஊழியர்கள் துறைசார் தேவைக்கேற்ப நியமிக்கப்படாத நிலையும் இருந்துள்ளது. அத்துடன் வேலைத்திட்டம் நடைபெற்றதற்கான ஆவணங்கள் முழுமையாக காணப்படாத நிலை உள்ளது.

 அத்துடன் புதுய நிர்வாகம்  ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதனூடாகவே நேர்மையான நிர்வாகத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் என நிறுவனத்தின் பணிப்பாளர் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து கொண்டபின் கருத்து கூறிய அமைச்சர் எனது பொறுப்பில் உள்ள எந்தவொரு பணியிடத்திலும் ஊழியர்கள் அனைவரும் பாகுபாடு அற்ற வகையில் ஒற்றுமையுடன் பணியாற்றி சிறப்பான சேவையை வழங்கவேண்டும் என்பதுடன் அனைவரது ஒரு ஒருமித்த உழைப்பினூடாகவே நிறுவனங்கள் முன்னெடுக்கும் பணிகளின் இலக்கை எட்ட முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கடற்றொழில் உபகரண உற்பத்தியை மேற்கொள்ளும் குறித்த நிறுவனம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

Related posts:

அதிகளவு அரச ஊழியர்கள் இருந்தும் மக்களது தேவைகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
பலாலி விமான நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தால் வடமாகாணம் பொருளாதார...
உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விவேகமற்ற அரசியல் தலைமைகளினால் வழிமாறிச் சென்று மக்களை கையேந்து...