வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல்!

Thursday, April 21st, 2022

நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மீண்டும் வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

வடகடல் நிறுவனத்தின் உற்பத்திச் செயற்பாடுகளுக்கு தேவையான சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான   உபகரணங்கள் மற்றும் மூலப் பொருட்களை இந்திய கடன் திட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பாரம்பரிய கைத்தொழில் அமைச்சராக கௌரவ டக்ளஸ் தேவானந்தா செயற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயற்பட்டு வந்த வடகடல் நிறுவனம், 2015 – 2019 வரையான காலப் பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் மோசமான செயற்பாடு காரணமாக பாரிய பின்னடைவைச் சந்தித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களுடனான சந்திப்பு எமக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது – செயல...
மண்ணெண்ணையை அன்பளிப்பாக வழங்குவதற்கும் சீனா முன்வர வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மு...
தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க ...