வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, December 3rd, 2021

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டம் ஆகியவை தொடர்பாக இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விரிவாக ஆராயப்பட்டது.

கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்கா மற்றும் வடகடல் நிறுவனத்தின் தலைவர் திரு. திசைவீரசிங்கம் ஆகியோர் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், வங்கிக் கடனை பெற்று யாழ்ப்பாணம் மற்றும் வீரவல ஆகிய இடங்களில் உள்ள வலைத் தொழிற்சாலைகளின வினைத்திறனான செயற்பாட்டை அதிகரிப்பது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது

இதனிடையே

வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சங்கம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் மற்றும் ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தின் செயற்பாடுகளை வலுப்படுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைக்கப்பட்டன.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று கடற்றொழில் அமைச்சரை சந்தித்த குறித்த தொழிற்சங்க பிரதிநிதிகளினால் மேற்குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அவைதொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பேரூந்துப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் அதிகாரிகளை சந்தித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன், குறித்த விடயங்களில் தனக்கிருக்கும் அக்கறையினையும் துறைசார் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார்

000

Related posts:


வன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை விற்கும் கைம்பெண்கள் : அவலத்தை போக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் டக...
தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான விஷேட பதிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஹெகலிய ரம்புக்...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர் கலந்துர...