லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடல்!

Friday, June 10th, 2022

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடினார்.

கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும்  இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற பல நாள் கலன்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சீராக தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நேற்று முன்தினம் கடலுணவு ஏற்றுமதியாளர்களை சந்தித்து எரிபொருள் கொள்வனவிற்கு தேவையான டொலர்களை பெற்றுக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடிய நிலையில், லங்கா ஐ.ஓ.சி. நிறுவன அதிகாரிளுடன் கடற்றொழில் அமைச்சர் சந்திப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மேற்கொண்டிருந்தார்.

கடற்றொழில் அமைச்சரின் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது இவ்வாறிருக்க

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்(ஜனா), கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அழிந்துபோன தேசத்தை கட்டியெழுப்பும் விடிவெள்ளியாக திகழ்பவர் டக்ளஸ் தேவானந்தா - முல்லை. கேப்பாப்புலவு ...
பொதுத் தீர்மானங்ககளின் அடிப்படையில் செயற்படுங்கள் – தீவகப் பிரதேச செயற்பாட்டாளர்கள் மத்தியில் செயலாள...
விவேகம் இல்லாத வீரத்தின் விளைவுகளையே மக்கள் அனுபவிக்கின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

இந்திய அரசின் உதவியுடன் தீவக மக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - அமைச்சர்...
அராலி வள்ளியம்மை வித்தியாலய கட்டிட புனரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
மண்ணெண்ணை விநியோகத்தில் கடற்றொழிலாளர்களுக்கு முன்னுரிமை - மீறுகின்றவர்களின் அனுமதி இரத்து - அமைச்சர்...