ரின் மீன் உற்பத்தி ஆலைகளை மீளவும் இயக்க அமைச்சரவை அனுமதி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, April 8th, 2020

நாட்டில் ஏற்கனவே இயங்கிவந்த நிலையில் கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட அதீத வரிச் சலுகைகள் காரணமாக பாதிப்புக்குள்ளாகி மூடப்பட்ட ரின் மீன் உற்பத்தி ஆலைகளை மீளவும் இயங்கச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்றையதினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மன்னார் பேசாலையில் உள்ள குறித்த ரின் மீன் உற்பத்தி ஆலை உள்ளிட்ட நாட்டிலுள்ள 6 உற்பத்தி ஆலைகளையும் மீள இயக்குவதற்கான சலுககைளை வழங்கி அந்த ஆலைகளை மீள இயக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன் குறித்த அமைச்சரவை பத்திரத்தில் கடந்த நல்லாட்சி அரசு ஏற்கனவே மகிந்த ராஜபக்ச அரசின் காலத்தில் இருந்துவந்த இறக்குமதியாளர்களுக்கான வரியான 102 ரூபாவை 52 ரூபாவாக குறைத்தது மட்டுமல்லாது அந்த இறக்குமதியாளர்களுக்கு இன்னும் பல சலுகைகள் வழங்கியிருந்தது.

இத்தகைய நிலைமையால் எமது உள்ளூர் உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர் கொள்ள நேர்ந்ததால் இலங்கையில் இயங்கிவந்த 6 உள்ளூர் ரின் மீன் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டன.

ஆனாலும் தற்போது நாட்டின் சூழ்நிலை கருதி எமது நாட்டின் வழங்களில் ஒன்றான கடல் வளத்தை நம்பி முன்னெடுக்கப்பட்ட அந்த ஆலைகளை மீளவும் இயங்குவதற்கு இலகு கடன்களை வழங்கவதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பதுடன் உற்பத்திக்கான மானியங்கள் வழங்கப்பட்டு மீள இயங்க செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் ஏற்கனவே கடந்த ஆட்சியாளர்களால் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் இரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையிலேயே குறித்த ஆலைகளை மீள இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்ரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நட்டின் அனைத்து நபர்களுக்கும் என சமமானதுமான ஒரு வரிக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும்  - நாடாளுமன்றி...
கல்வி அமைச்சரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது! ஏனைய விடயங்கள் குறித்தும் அவதானமெடுக்க வேண்டும்!
உறுதியற்ற பொருளாதார கட்டமைப்பே பெரும் பாதிப்புக்களுக்கு காரணமாக அமைகின்றது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்...