ரயில் சேவையின் அதிகரிப்பு நாட்டின் வாகன நெரிசல்களுக்கு தீர்வைத் தரும் –  டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2018

ரயில் சேவையினை மேலும் அதிகரித்தும் தரமுயர்த்தியும் விஸ்தரிப்பதன் ஊடாகவும் எமது நாட்டில் காணப்படுகின்ற வாகன நெரிசல்களுக்கு போதியளவு தீர்வு காணமுடியும் என எண்ணுகின்றேன்.- என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிததுள்ளார்.

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழான கட்டளை 203ஆம் அத்தியாயம் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொணடு கருத்துத தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர மேலும்; தெரிவிக்கையில்  –

அந்த வகையில் வடக்கின் ரயில் சேவையில் பாரிய நெருக்கடிகள் காணப்படுவதால், இரண்டாவது தபால் ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கும் ரஜரட்ட ரெஜின உள்ளிட்ட நகரங்களுக்கு இடையிலான இரயில் சேவைகளை வவுனியாவிற்கும் கிளிநொச்சிக்கும் இடையில் நடத்துவதற்கும், காங்கேசன்துறைக்கும் பளைக்கும் இடையில் அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களது வசதி கருதி விசேட ரயில் சேவையொன்றை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதேபோன்று மாகோவிற்கும் பொல்கஹவலைக்கும் இடையில் வடக்கு – கிழக்குப் பகுதிகளிலிருந்து எதிர்த்திசையில் பயணிக்கும் இரயில்கள் கடவைகளில் தாமதமடைவதால் இரு வழிப் பாதை அமைப்பதற்கும் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு உதவி இயந்திரி அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கும் உத்தரதேவி ரயில் சேவையை கல்கிஸ்ஸை வரையில் நீடிப்பதற்கும் குளிரூட்டப்பட்ட இரயில் சேவைகளில் ஈடுபடுகின்ற இரயில்களில் விசேட பெட்டிகளை தினம்; தேவை கருதி இணைப்பதற்கும் ரயில்களின் ஆசனங்கள் மலசலகூடங்கள் உள்ளிட்டவற்றின் தரங்களை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான இரயில் சேவையில் போதியளவில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளை பணியாளர்களை நியமிப்பதற்கு கூடிய கவனம் செலுத்துமாறும் மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமானது அதனது வினைத்திறன்களைக் கருத்தில் கொண்டு முழுமையாக கணினிமயப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்திருந்தன. இந்த ஏற்பாடுகள் தற்போது எந்ந நிலையில் இருக்கின்றன? என அறிய விரும்புகின்றேன்.

கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஊடகங்களால் பேசப்பட்ட துறைகளில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும் முக்கிய இடத்தினை வகித்திருந்தது. இத்தகைய நிலைமைகளை ஒழிப்பதற்காகவே மேற்படி கணினிமயப்படுத்தல் கொண்டுவரப்படப் போவதாகக் கூறப்பட்டது. எனவே அதனது தற்போதைய நிலைமைகள் குறித்து அறியத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:

யாழில் பலரைப் பாதித்துவரும் தென்னிலங்கை நிதி நிறுவனம் உடன் தடை செய்யப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
கிடைக்கப்பெறுகின்ற வளங்களைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் - முல்லைத்தீவில் டக்ளஸ் தே...
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை மனித வியாபாரமாகவே முகவர்கள் நடத்துகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி ச...

உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விவேகமற்ற அரசியல் தலைமைகளினால் வழிமாறிச் சென்று மக்களை கையேந்து...
புரவியை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் - ஈ.பி.டி.பி அமைப்பாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு...
ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரா...