ரத்னஜீவன் ஹூலின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, June 10th, 2020

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் இன்று, நேற்று அல்ல நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய பக்கச்சார்பான குழப்பத்தை ஏற்படுத்தகூடிய கருத்துக்கைள தான் தெரிவித்திருக்கின்றார். அது ஏற்றுக் கொள்ள கூடியதல்ல.

அவருடைய வரலாற்று ரீதியான சர்ச்சைகள் தொடர்பாக என்னிடம் ஆவணங்கள் இருக்கின்றன. உரியநேரத்தில் அவை வெளியில் வரலாம் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா அமைந்துள்ள அரச வாடிவீட்டில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

வவுனியா பொருளாதார மத்தியநிலையத்தினை திறக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் எனக்கு தெரிவித்துள்ளனர். அதனை ஆரம்பிப்பதற்கான சாதகமான விடயங்களை விரைவில் ஏற்படுத்துவேன்.

கடந்த ஆட்சியில் முன்னெடுக்கபட்ட அபிவிருத்தி திட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதில் பலவற்றை அரசியல்வாதிகள் துஷ்பிரயோகம் செய்துவிட்டனர். அதனை ஆராய்வதற்கு ஒரு குழுவினை நியமிக்குமாறு அமைச்சரவையில் கேட்டிருந்தேன்.

எனவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிற்கு பின்னர் அந்ததிட்டங்கள் தொடர்பாகவும் முறைக்கேடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கபடும் என்’றார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் எமக்கு அதிகளவான ஆசனங்களிற்கான வாக்குகளை மக்கள் வழங்கினால் அரசியல் உரிமைக்கான தீர்வு, அபிவிருத்தி அன்றாட பிரச்சினைகளிற்கான தீர்வுகளை அடுத்த 5 வருடத்திற்குள் எம்மால் தீர்ரைவ பெற்றுத்தர முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அரசியல் கைதிகளது விடுதலை அல்லது காணாமல்போன உறவுகளுக்கு பரிகாரம் காணுவதற்கு அல்லது அவற்றை அறிவதற்கும் இவ்வாறு மக்களின் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து தேர்தலில் வாக்குகளை அபகரிப்பதற்காக இதர தரப்பினரால் முன்வைக்கப்பட்ட எவ்வளவோ கோரிக்கைகள் தீர்க்கப்படவில்லை.

தற்போது அரசியல் கைதிகளின் பட்டியல் ஒன்றினை வழங்குமாறு பிரதமர் கேட்டிருந்தார். அதை நாம் கொடுத்திருக்கின்றோம் என தெரிவித்த அமைச்சர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்ததுபோல நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

நாம் ஒரு ஐந்தாறு ஆசனங்கள் அதற்குரிய வாக்குகளை மக்கள் வழங்குவார்களாக இருந்தால் மக்களுடைய பிரச்சினைகளான அரசியல் உரிமைக்கான தீர்வு, அபிவிருத்திக்கான தீர்வு, அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்திற்கும் அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தீர்வுகண்டுதருவோம் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது என்றார்.

Related posts:

இந்து மற்றும் முஸ்லிம் மக்களது மத ரீதியிலான  நாட்களிலும் மதுபான சாலைகளை  மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...
கறுப்பு ஜூலை நிகழ்ந்திருக்கா விட்டால் நாடு பெரும் அபிவிருத்தி அடைந்திருக்கும்- நாடாளு மன்றில் டக்ளஸ்...
ஊடகவியலாளர் வித்தியாதரனுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை ...

உள்ளுராட்சித் தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும்  ஐரோப்பியயூனியன் பிரதிநிதிகளிடம் டக்ளஸ் தேவானந்தா...
யாழ்.போதனா வைத்தியசாலை நிலைவரங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை - சுகாதார அமைச்சரிடமும் வலியுறுத...
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் - கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு - சர்வதேச மீன்பிடி தொடர்பில் முக்கிய கலந்த...