யுத்த அழிவுச் சின்னங்கள் விரைவாக அகற்றப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி கோரிக்கை!

யுத்த அழிவுச் சின்னங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து அகற்றுவதையும் ஒரு விடயமாக இதில் சேர்த்துக் கொள்ளப்படல் வேண்டும். இதிலும்கூட தேசிய நல்லிணக்கம் பற்றி கதைக்கின்ற நீங்கள் பாரபட்சமே பார்க்கின்றீர்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் வழங்குதல் தொடர்பிலான அலுவலகம் தொடர்பில் இடம்பெறுற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் ஏற்பட்டிருந்த யுத்தப் பாதிப்பு இடங்கள் அனைத்தும் மீளப் புனரமைக்கப்பட்டு, மீளக் கட்டியெழுப்பப்பட்டு, அவை இன்று ஆக்கத்தினை நோக்கி நகர்த்தப்படுகின்றன.
ஆனால், எமது பகுதிகளில் மாத்திரம் அவற்றை அப்படியே வைத்து, பழைய குரோதங்களை மீண்டும் தூண்டுகின்ற வகையில் அதைப் பார்க்கின்ற பெரும்பான்மை இன மக்களுக்கு காட்சிப் படுத்தி வருகின்றீர்கள்.
மறுபக்கத்தில் எமது மக்கள் இத்தகைய செயற்பாடுகளுக்கு முன்பாக மிகவும் வேதனையடைகின்ற – உணர்வுகளால் ஒருவிதமான துன்பங்களை சுமக்கின்ற நிலையே காணப்படுகின்றது.
எனவே, இந்த விடயங்களை அவதானத்தில் கொண்டு, எவ்விதமான பாரபட்சங்களும் அற்ற வகையில், பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு உதவக்கூடிய வகையில், இந்த அலுவலகம் உருப்பெற்று, செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை முன்வைக்கின்றேன் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|