யுத்தம் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல எமது வாழ்க்கை நிலையையும் மாற்றியமைத்து விட்டது: மீட்டெடுக்க வழிவகை செய்து தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் கிராஞ்சி மக்கள் கோரிக்கை!

Saturday, February 23rd, 2019

நாட்டில் நடைபெற்ற யுத்தம் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல எமது வாழ்க்கை நிலையையும் மாற்றியமைத்து விட்டது. தற்போது வாழ்க்கையில் நம்பிக்கை அற்ற நிலையிலேயே இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகிம் நிலை காணப்படுகின்றது. இந்த அவலத்திலிருந்து மீட்டெடுக்க வழிவகை செய்து தாருங்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கிராஞ்சிப் பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூநகரி கிராஞ்சி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அப்பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்ட செயலாளர் நாயகம் அவர்களிடமே இவ்வாறு  கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

அழிவு யுத்தம் எமது வாழ்வாதாரத்துடன் வாழ்க்கை நிலையையும் மாற்றியமைத்து விட்டது. இன்று நாம் ஒருவேளை உணவுக்காகவே உயிர்ப் பணயம் வைத்து கடற்றொழிலை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் எமது பகுதியில் வேற்று இடத்து மீனவர்கள் வந்து சட்டவிரோதமான முறையில் எமது கடற்பரப்பில் கடற்றொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் எமது கடல் வளம் அபகரிக்கப்படுவதுடன் இப்பிரதேச கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரமும் பறிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. இந்த சட்டவிரோத அல்லது எல்லைதாண்டிய கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரும் பட்சத்திலேயே இப்பகுதி கடற்றொழிலாளர்கள் தமது வாழ்விஜயல் நிலையில் முன்னேற்றம் காணமுடியும்.

அதுமட்டுமல்லாது எமது காக்கைதீவு கடலின் கரைப்பகுதியில் படகுகளை கரைசேர்ப்பதற்கான வசதிகள் எதும் காணப்படாத நிரலையால் தொழிலுக்க படகில் சென்று திரும்பும் தொழிலாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை காணப்படகின்றது.

அந்தவகையில் பூநகரி கிராஞ்சி கடற்தொழிலாளர்களின் நலன்களை கருத்திற் கொண்டு காக்கைதீவு கடலின் கரைப் பகதியில் படகுகளை கரை சேர்ப்பதற்கு ஏற்றவாறு ஒரு வாய்க்கால் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

கடற்றொழிலாளர்களது தேவைப்பாடுகளைளும் பிரச்சினைகளையும் நேரில் சென்று அவதானித்த செயலாளர் நாயகம் அவர்கள் துறைசார் தரப்பினருடன் பேசி விரையில் அதற்கான தீர்வை பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.

Related posts: