யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கும்  புனர்வாழ்வு பெற்றவர்களுக்கும் விசேட நிதித்திட்டம் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, June 9th, 2018

யுத்தத்தினால் நேரடியாக பாதிப்படைந்து நலிவடைந்த மக்களினதும், புனர்வாழ்வு பெற்றவர்களினதும் வாழ்வாதாரத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் விசேட நிதித்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வியட்நாம் யுத்தத்தில் ஈடுபட்ட அமெரிக்கப் படையினருக்கு அமெரிக்க அரசு விஷேட நிதித்திட்டம் ஒன்றை உருவாக்கியதாகவும்  அதே போல இலங்கையிலும் யுத்தத்தில் ஈடுபட்ட படையினருக்கும் விஷேட நிதியுதவித் திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்  என்ற குரல்கள் இந்தச் சபையிலே எழுப்பப்பட்டுள்ளன.

ஒன்றைமட்டும் கவனத்தில் கொள்ளவேண்டும். அமெரிக்கா மற்றும் வியட்நாம் ஆகியன இருவேறு நாடுகளாக இருந்து யுத்தத்தில் ஈடுபட்டன.

ஆனால் இலங்கையில் நடந்த யுத்தம் ஒரே நாட்டுக்குள் நடந்த யுத்தம் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

நடந்து முடிந்த யுத்தத்தில் பெருந்தொகையான மக்கள் தமது உயிர்களையும் உடமைகளையும் இழந்து பெருந்துயரங்களை சந்தித்திருந்தார்கள்.

அந்தவகையில் நேரடியாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களுக்கும் விஷேட நிதித்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.

அத்துடன் இத்திட்டத்தினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த வாழ்வாதார கட்டுமானங்களை முழுமையாக கட்டியெழுப்பி அதனூடாக அவர்களது வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

z_fea800 copy

Related posts:


தேர்தல் காலத்தில் நியமனங்களை வழங்குவது தமிழ் தேர்தல் நாடகம் – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!
கடந்த காலங்களை உணர மறுத்தால் எதிர்காலத்தையும் தொலைத்து விடுவோம் - மயிலிட்டியில் அமைச்சர் தேவானந்தா த...
வேலணை, அராலித்துறையில் தனியார் முதலீட்டுடன் இறால் மற்றும் நண்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுக...