யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு முழுமையான வாழ்வாதார ஏற்பாடு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, October 10th, 2018

இழப்புகளுக்கான எதிரீடு அலுவலகமென்பது, யுத்தம் இந்த நாட்டில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழிந்த நிலையில் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், இந்த அலுவலகம் துரித கதியில் அமையப்பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். கடந்த கால யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து நடுத் தெருவில் நிற்கின்ற எமது மக்களுக்கு இது பூரண மன நிம்மதியைத் தந்து விடாது. எனினும், அவர்களது மனக் காயங்களுக்கு ஒத்தடமாகவாவது இது அமையும் என்றே நாம் கருதுகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் வழங்குதல் தொடர்பிலான அலுவலகம் தொடர்பில் இடம்பெறுற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்ட எமது மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் போதிய வாழ்வாதாரங்கள் இன்றிய நிலையில், மிகவும் பரிதாபகரமான வாழ்க்கையினையே மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மக்களுக்கு ஒரு முழுமையான வாழ்வாதார உதவியாக ஒரு தொகை நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என நான் ஏற்கனவே பலமுறை இந்தச் சபையின் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தேன். அது தொடர்பில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சரினால் ஓர் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அது அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

அத்தகைய துரதிஸ்டவசமான நிலைமைகள் ஏற்படாத வகையில், கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு ஒரு முழுமையான வாழ்வாதார ஏற்பாடு இந்த அலுவலகத்தின் மூலமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எனவே, தற்காலத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதைப் போன்று, இந்த மக்களும் இந்த நாட்டு மக்கள் எனக் கருதி, அவர்களும் இந்த சமூகத்தில் வாழ வேண்டிய மக்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்து எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் இந்த மக்களின் வாழ்வாதாரங்களுக்கென ஒரு விசேட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாக இங்கு முன்வைக்கின்றேன்.

Related posts:

மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளில் ஆயுதக் களஞ்சியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந...
எமது மக்களுக்குப் பாதி ப்பினையும் இந்தியா வுடனான முரண்பாட்டையும் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசு நட...
ஆட்சி மாற்றங்களை உருவாக்குவதில் இருக்கின்ற அக்கறை தமிழ் மக்களின் அரசியலுரிமை விடயத்திலும் இருக்க வேண...

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? - டக்ளஸ் தேவானந்தா!
பரீட்சைகள் தொடர்பில் ஏற்பட்டுவரும் குளறுபடிகள் மீள ஏற்படாத வகையில் உறுதிப்படுத்தவேண்டும் - டக்ளஸ் M....
தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கும், நிலையான அபிவிருத்திக்கும்,ஒளிமயமான எதிர்காலத்திற்கும் இந்தியா த...