யாழ் மாவட்ட மக்கள் குறைகேள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதி மக்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.
இன்றையதினம் (25) கட்சியின் யாழ் மாவட்டத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பின்போது மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பொது அமைப்புகள் ,அரச உத்தியோகத்தர்கள் முதற்கொண்டு பொதுமக்கள் வரை பலதரப்பட்ட தேவைப்பாடுகளுடன் வருகைதந்து அமைச்சரை சந்தித்து தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
அனைவரதும் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை ஆராய்ந்துகொண்ட அமைச்சர் அவர்களது நியாயமான தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நம்பியதால் நாம் நாதியற்று தவிக்கின்றோம் - வரணிப்பகுதி மக்கள் ஆதங்கம்!
வடக்கு - கிழக்கிற்கு சமச்சீரற்ற விசேட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
|
|