யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கிவைப்பு!

யாழ் மாட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தொகுதி பயனாளிகளுக்கு ஐஸ் பெட்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் பிடிக்கப்படுகின்ற மீன்களை குறிப்பிட்டளவு நேரத்திற்கு பழுதடையாமல் பாதுகாப்பதற்கு வசதியாகவே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் குறித்த ஐஸ் பெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் நீரியல்வள பணிமனையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பங்கேற்புடன் ஐஸ் பெட்டிகள்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இன்றைய நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தொகுதி பயனாளிகளுக்கான ஐஸ் பெட்டிகள் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்னாள் புலி உறுப்பினர்கள் மீது நெருக்கடிகளும் அச்சுறுத்த ல்களும் அதிகரித்துள்ளன - டக்ளஸ் தேவானந்த...
2020 நாடாளுமன்றத் தேர்தல் : வேட்பு மனுத் தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!
அராலி வள்ளியம்மை வித்தியாலய கட்டிட புனரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
|
|