யாழ் மாவட்டத்தைப் போன்று முல்லை மாவட்டத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பி தாருங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் முல்லை மக்கள் கோரிக்கை!
Friday, December 15th, 2017யுத்த காலத்திலும் கூட யாழ் மாவட்ட மக்களை அபிவிருத்தியால் கட்டி எழுப்பியது போல யுத்தத்தால் அழிந்து கிடக்கும் எமது முல்லை மாவட்டத்தையும் அங்கு வாழும் மக்களையும் மீட்டுத் தாருங்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்ளுடனான சந்திப்பொன்று நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட மக்கள் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்
தமது அரசியல் வெல்லப்படும் வரையில் மட்டுமே சுயலாப அரசியல் வாதிகள் தம்மிடம் வருவதாக தெரிவித்துள்ள அம்மக்கள் வெல்லப்பட்டதன் பின்னர் தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவருவதாகவும் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் தமது சுயநலன்களில் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் மிகுந்த அக்கறையாக இருக்கின்றார்கள். அவர்களை அவர்களது அலுவலகங்களில் காணும்பொருட்டு நாங்கள் செல்கின்ற சந்தர்ப்பங்களில் கூட அவர்கள் எம்மை சந்திப்பதிலோ பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காண்பதிலோ அக்கறை காட்டுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.
Related posts:
|
|